அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

70பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளிகள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் கோடை வெயில் காரணமாக காலதாமதமாக இன்று திறக்கப்பட்டது பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ மற்றும் பெற்றோர் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமாக பள்ளி வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து தனது நண்பர்களை சந்தித்துக் கொண்டனர். மேலும் ஒரு வகுப்பறையில் இருந்து மற்ற வகுப்பறைக்கு புதியதாக நுழைந்த மாணவ மாணவிகளுக்கு புதிய நோட்டா புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி திறக்கும் முன்னதாக அனைத்து பள்ளிகளும் சுத்தப்படுத்தும் பணிகள் பள்ளி துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வில் காட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேவதி சண்முகம், கிராம செயலாளர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி