பொன்னேரியில் பாஜக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

77பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொன்னேரி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக திமுகவினர் ஏராளமானோர் பொன்னேரி நகர வீதியில் பேரணியாக வந்து கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனகோசங்கள் எழுப்பப்பட்டது. 0 பைசா கூட பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் பேனர்களில் 0 பைசா என்னும் நாணயங்கள் பொரித்த கட்டவுட்டுகள் கட்டப்பட்டு இருந்தது. பெரும்பான்மையான திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி