திருவள்ளூர் மாவட்டம்
வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பாலமுருகன் கோவில் புதிதாக கட்டுவதற்கான அடிக்கல் நடும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில்.
சர்ச்சுகள் மசூதிகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன ஒவ்வொரு ஆண்டும் ஆனால் இந்து கோவில்கள் குறைந்த அளவிலே கட்டப்படுகிறது 42 ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் வரும் வருமானங்களை புதிய கோயில்கள் கோயில்கள் இல்லாத ஊரில் ஆங்காங்கு கட்ட வேண்டுமென கோரிக்கை வைப்பதாகவும்
மத்திய அரசின் விஷ்ணு கர்மா திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திட்டம் இதில் ஜாதி முத்திரை குத்துவது சரி இல்லை
முதல்வரின் மகன் முதல்வராகலாம் அது குலத்தொழில் அல்ல சிற்பியின் மகன் சிற்பம் செய்தால் அது குலத்தொழிலா என கேள்வி எழுப்பிய அர்ஜுன் சம்பத்
விஷ்ணு கர்மா திட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள்
குல தொழில் என கூறி ஒடுக்கநினைப்பது இளைஞர்களை பாதிக்கும் என்றும்
வானதியின் பேச்சைக் திரித்து
வேண்டுமென்றே பேசுகிறார்கள் என்றும் திருப்பதி லட்டு பிரசாதம் புனிதமானது அதில் கலப்படம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இதில் இழிவுபடுத்தக் கூடாது என அவர் தெரிவித்தார்.