திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா அவர் மகன் ஜித்தன் உள்ளிட்டோர் பௌத்த மதத்தை தழுவும் பௌத்த மத ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பகவான் கௌதம புத்தர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் மத்தியில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு மலர் தூவி பௌத்த மத வாக்குறுதிகளை ஏற்று பௌத்த மதத்தை ஏழு பேர் ஏற்றுக் கொண்டனர். பின்னர் பௌத்த மதம் குறித்த விளக்கங்களும் அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவியதற்கான காரணங்களையும் தற்போது உள்ள நிலைப்பாட்டினையும் தலைமையேற்று நடத்திய
புத்த பிக்கு புத்த பிரகாஷ் தீட்சை அளித்து விளக்கம் அளித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ், அருப்புக்கோட்டை அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர் டேவிட், மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.