பேருந்து அல்லது ரயிலில் தொடர்ந்து ஒரே மார்க்கத்தில் பயணிக்கும் மாணவர் ஒருவர், மற்ற மாணவர்களுக்கு தலைவனாக செயல்படுவதாக அறிவித்துக் கொண்டு தனக்கு கீழ் ஒரு குழுவை உருவாக்கி ‘ரூட்டு தல’ ஆகிறார். இவரின் கீழ் செயல்படும் மாணவர்கள் தங்கள் ரூட்டுக்கு என பிரத்யேகமான கானா பாடலை வைத்திருக்கின்றனர். பிற ரூட்டில் வரும் மாணவர்களை வசைபாடி தங்கள் ரூட்டு தான் சிறந்தது என அவ்வப்போது பாடல்களையும் உருவாக்கி வருகின்றனர். இதுதான் பிரச்சனைக்கு ஆணிவேர்.