ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் சுத்தமாகவும் இருக்க வேண்டும். அசுத்தமான ரத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு மஞ்சள், பூண்டு, எலுமிச்சை, பெர்ரி பழங்கள், பீட்ரூட், ப்ரோகோலி ஆகியவை உதவுகின்றன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த உணவுகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.