திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஒன்றியம் ஒதப்பை கிராமத்தில் நடைபெற்ற அதிமுக விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் அணி நிர்வாகிகளை சந்தித்து கட்சியில் பதவிகளில் உள்ளவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? என்பதை பரிசோதனை செய்து அவர்களுடன் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் முன்னாள் பொன்னேரி எம்எல்ஏ பலராமன் முன்னிலையில் பொன்னய்யன் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார், அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பதை முடிவு செய்வார். அதிமுகவில் மட்டும்தான் வீரர்கள் வீராங்கனை அணி ஏற்படுத்தியுள்ளது இதில் ஜெயிப்பவர்களுக்கு தங்கபதக்கம் வெள்ளி பதக்கம் ரொக்கப்பணம் பரிசாக அளிக்கப்படும் என்றும் எந்த வயதானவர்கள் என்றாலும் அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்கலாம் விளையாட்டுக்களில் கலந்து கொள்வதால் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றால் அரசு வேலையில் சேர வாய்ப்பு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்கிற முக்கியமான நன்மை என்றும் தமிழகத்தில் அதிமுக வலிமையோடு உள்ளது என்றார். எங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லை எதிரிகளும் யாரும் இல்லை சமமாகவே எல்லோரையும் கருதுகிறோம் என்று பொண்ணையன் தெரிவித்தார் அதிமுக என்பது சக்தி வாய்ந்த இயக்கம் என்றார்.
திமுக ஆளுங் கட்சியாக இருப்பதால் திமுக தான் பிரதான எதிரி பாஜக ஆளுங்கட்சியாக இல்லாததால் அவர்கள் எதிரி அல்ல என்றார்