மூதாட்டியின் நிலத்தை நூதனமான முறையில் விற்பனை செய்த உறவினர்

81பார்த்தது
மூதாட்டியின் நிலத்தை நூதனமான முறையில் விற்பனை செய்த உறவினர்
போரூர் அருகே மூதாட்டியின் நிலத்தை நூதனமான முறையில் விற்று, நூதனமான முறையில் ரூ 68 லட்சத்து 75 ஆயிரத்து 900 ஐ மோசடி செய்த உறவினர் மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் மதனந்தபுரத்தில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டிக்கு 2400 சதுர அடி கொண்ட வீட்டு மனை உள்ளது.

இந்த வீட்டு மனையை பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு ஜெயலட்சுமி ரூ 1 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை செய்தார். இதனை இவரது உறவினர் மகன் கங்கை அமரன் விற்பனை செய்து கொடுத்தார்.  

இவர் ஜெயலட்சுமியின் ஏடிஎம் கார்டு , செக் ஆகியவற்றை பயன்படுத்தி ரூ 68 லட்சத்து 75 ஆயிரத்து 900 ஐ மோசடி செய்து தனது தாய், தந்தை வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார்.

இந்த மோசடி குறித்து ஜெயலட்சுமி ஆவடி காவல் ஆணையர் கி. சங்கரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, நூதனமான முறையில் பணம் மோசடி செய்த கங்கை அமரன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி