திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த ரவுடி லோகேஷ்(32) இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை புதுவண்ணாரப்பேட்டை தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சொட்டை பிரகாஷ் எனபவர் லோகஷின் நண்பரான கானாங்கத்தை ராஜ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார்
இதனை கண்ட லோகேஷ் பிரகாஷை தலையில் தட்டி அனுப்பி வைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் நள்ளிரவு வரை பின் தொடர்ந்து தனது கூட்டாளிளோடு சேர்ந்து பாலகிருஷ்ணா நகர் பகுதியில் நள்ளிரவில் தனியாக இருந்த லோகேஷை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
தலை கை கால்கள் என படுகாயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்