திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மார்க்கெட் பகுதியில் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை தவறாக பேசிய பாஜக எச். ராஜா, ஒன்றிய அமைச்சர் பிட்டு ஆகியோரை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் இன்று (செப்.,18) கண்டன கோஷங்கள எழுப்பி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளம்பரத்திற்காக மட்டும் எச்.ராஜா இதுபோன்று தவறாக பேசி வருகிறார். இந்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தலைவர்கள் வம்சத்தில் வந்த ராகுல் காந்தியை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என லெனின் பிரசாத் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து அவதூறாக பேசிய எச். ராஜாவின் உருவப்படத்தை எரித்து எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தாஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.