டேவிட் வார்னருக்கு அனைத்து விதப் போட்டிகளிலும் கேப்டனாக விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வார்னரின் வருத்தத்தை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியாக வார்னருக்கு ஓராண்டு விளையாடத் தடையும், கேப்டனாக பொறுப்பேற்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வார்னர் ஓய்வு பெற்றிருந்தாலும், BBL தொடரில் கேப்டனாக வாய்ப்புள்ளது.