கண்புரை அறுவை சிகிச்சை முகாமை துவக்கிவைத்த எம்எல்ஏ

85பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில் அமைந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் திமுக இளைஞரணி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கிராமத்தில் உள்ளவர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மீ. வே. கருணாகரன், இளைஞரணி அணி துணை அமைப்பாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் சங்கர நேத்ராலயாவுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதவரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ். சுதர்சனம் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி