ஹிட்டாச்சி இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டம்

1557பார்த்தது
ஹிட்டாச்சி இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் இருந்து தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சவுடு மண் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஏரியில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள பகுதியில் சவுடு மண் எடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்தனர். ஆனால், சவுடு மண் அள்ளும் தனி நபர்கள் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து வேறு பகுதியில் மண் அள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிலவிடத்திற்குச் சென்ற அப்பகுதி கிராம மக்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி