சவுக்கு சங்கரை தாக்கிய பெண் காவலர்கள்?

62பார்த்தது
சவுக்கு சங்கரை தாக்கிய பெண் காவலர்கள்?
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (மே 15) திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சுற்றியும் 50க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கையில் மாவுக்கட்டுடன் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், கோவையிலிருந்து தன்னை அழைத்து வந்தபோது பாதுகாப்பிற்காக வந்த பெண் போலீசார் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த காவல்துறை, பெண் காவலர்கள் விரல் கூட அவர் மீது படவில்லை என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி