வன்முறையால் 67 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி தவிப்பு

78பார்த்தது
வன்முறையால் 67 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி தவிப்பு
கடந்த ஆண்டு மணிப்பூரில் நடந்த வன்முறை காரணமாக 67,000 பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் கலவரம் காரணமாக வீடுகள் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இடம்பெயர்ந்தவர்களில் சிலர் நாகாலாந்து, அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். நாடு முழுவதும் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களால் மேலும் 5.28 லட்சம் பேர் வீடிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி