காயலார்மேடு கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

1540பார்த்தது
கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய நூதன அஸ்டதபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவின் துவக்கமாக கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை 21ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 9 மணியிலிருந்து 5 மணிக்குள் அம்மனின் சன்னிதானத்தில் விக்னேஸ்வர பூஜை, லட்சுமி கணபதி ஹோமம், நவகிரக ஓமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்புமிக்க பூஜைகள் நடத்தப்பட்டு 22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் மஹா கும்பாபிஷேக விழாவானது இரண்டாம் கால யாகசால பூஜை நடத்தப்பட்டு விசேஷ திவ்ய ஹோமங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றுது.

விமான கோபுரத்தின் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்பொழுது பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷங்களுடன் அம்மனை தரிசனம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி