திருவள்ளூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார், பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகளை நட வேண்டும் என கிராம மக்களிடம் சௌமியா அன்புமணி வேண்டுகோள் வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உட்பட்ட சென்னாங்கரணி கிராமத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகியான பசுமை முத்து என்பவரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார், ஒவ்வொருவரும் தங்களது இல்ல நிகழ்வுகளின் போது அதன் நினைவாக மரங்களை நட்டு அதை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் கிராம மக்களிடம் அவர் எடுத்துரைத்தார்.