திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் கடந்த 2020ம் ஆண்டு எம்டிசி பிசினஸ், ஓபிஜி என இரு தனியார் தொழிற்சாலைகள் ஓடை, மயானம், வாய்க்கால் வகைப்பாடு கொண்ட அரசு நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருவதாகவும் அந்த நிலங்களை அகற்றுமாறும் கடந்த 2020ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின்படி, உயர்நீதிமன்ற ஆணையின்படி நிலங்களை மீட்க வந்த அரசு அதிகாரிகளுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் அங்கு வசித்து வந்த ஏழை விவசாயிகளின் வீடுகள் மட்டும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்தப் புகைப்படங்களை வைத்து உயர் நீதிமன்றமும் ஏமாற்றப்பட்டது.
இதை கையில் எடுத்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிலைநாட்ட தவறியதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டபோது ஊராட்சி நிர்வாகிகள் தொழிற்சாலை ஆதரவாளர்கள் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். அவர்களிடம்
பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம் அரசு பணியை செய்ய விடுமாறு தனது இருகைகளை கூப்பி கும்பிட்டார். ஒரு மாத காலம் அவகாசம் அளிக்குமாறு தொழிற்சாலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது