எட்டியம்மன் கோயில்: 2வது நாளாக குவிக்கப்பட்டுள்ள போலீசார்

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் கோயில் ஒன்று புதிதாக கட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 9 தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்போது கோயிலில் வழிபாடு நடத்துவதில் பட்டியல் சமூகம், கிராமத்தில் உள்ள மற்ற பிற சமூகத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவாய்த்துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனிடையே 37 நாட்களுக்கு பின் இருதரப்பு மக்களையும் அழைத்து பேசி சமரசம் ஏற்பட்டு பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் சமரச முயற்சியால் 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு நேற்று (செப்.,16) கோயில் திறக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு வந்த பட்டியிலன மக்களை பத்திரமாக போலீஸ் பாதுக்காப்புடன் வீட்டில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்றும் (செப்.,17) வழுதலம்பேடு கிராமத்தில் இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு கிராமத்தில் உள்ள சந்திப்பு சாலை, வழுத்தலம்பேடு காலனி, கோயில் வளாகம் முழுவதும் இரவு பகலாக தொடர்ந்து இரண்டாவது நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி