எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இழிவாகப் பேசிய பாஜக
எம்பி அனுராக் தாக்கூரை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்
கும்மிடிபூண்டி பேருந்து நிலையத்தில் அண்ணா சிலை முன்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தபோது அவரை இழிவாக பேசிய பாஜகவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான துரை சந்திரசேகர் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி தலைமையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்தே தீரும் என்றும் அதற்கான காலம் வரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்