திருவள்ளூர் அருகே முத்து கொண்டாபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவவீரர் வெங்கடேசன்(43) கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி
(46நாட்களுக்கு முன்) வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் அதில் முக்கிய குற்றவாளிகளான திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் காந்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடேசனின் தாயார் பொன்னம்மாள் அண்ணன் பாபு தம்பி முருகன் ஆகியோர் உறவினர்களுடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளிடம் முக்கிய குற்றவாளி தப்பாக விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்
இந்த கொலை வழக்கில் வெங்கடேசனின் மனைவி
சந்தியா அவரது அண்ணன் சண்முகம் லோகேஷ் மற்றும் கூலிப்படையினர் ஐந்து பேர் என எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலையில் தொடர்புடைய முக்கிய நபரான திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் காந்த் தலைமறைவாக உள்ள நிலையில் அவரையும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மாமியார் சரஸ்வதியையும் கொலைகள் முக்கிய தொடர்புடையவர்கள் என்று உறவினர்கள் அளித்த புகாரில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் இடம் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது