மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

84பார்த்தது
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
திருநின்றவூர் அடுத்த பாக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பசு மாடு வளர்த்து வந்தார். திருமணமாகாத இவர், தாய் லட்சுமி, 60, உடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை அவரது பசுமாடு ஒன்று, பாக்கம் அருகே கசுவா என்ற கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. பசுமாட்டை அழைத்து வர சென்றபோது, பிரகாஷின் கைகள் விவசாய நிலத்தில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. திருநின்றவூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :