இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் செயல்வீரர் கூட்டம்

72பார்த்தது
இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் செயல்வீரர் கூட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க இன்று (26/03/2024) மாலை 04: 00 மணி அளவில் பட்டபிராம், ஜெய கிரிஷ் மஹாலில் 2024 திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் செயல்வீரர் கூட்டம் மற்றும் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் அறிமுகம் செய்தல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடன் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பார்வையாளர் திரு கிரிராஜன் MP, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு கிருஷ்ணசாமி MLA, திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட, திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சார்ந்த திமுக மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, CPI, CPM, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மைய்யம், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் தலைமைக்கழக சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி