நாம் தமிழர் கட்சிக்கு உறுதியானது "மைக்" சின்னம்

97987பார்த்தது
நாம் தமிழர் கட்சிக்கு உறுதியானது "மைக்" சின்னம்
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு "மைக்" சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னம் ஒதுக்க கோரிய நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்க கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருந்தார். முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட சின்னமான "கரும்பு விவசாயி" சின்னத்திற்காக சீமான் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி