ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது: பொதுமக்கள் சாலை மறியல்

51பார்த்தது
ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது: பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய ராணுவ சாலையில் சாலையின் இரு புறங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைத்து பொதுமக்கள் இருபுறமும் நடந்து செல்வதற்காகவும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள 60 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வரும் வியாபாரிகள் பொதுமக்கள் யாரும் கடைக்குள் உள்ளே வருவதில்லை என சாலையோரம் கடை வைத்துள்ளனர்.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இன்று(செப்.5) மாலை போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினருடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர். அப்பொழுது பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது பெண்மணி ஒருவர் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி IAD மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி