தமிழக சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு நேற்று(செப்.6) வெளியிட்டுள்ள அறிக்கையில் பணகுடி மற்றும் வள்ளியூர் பேரூராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
இதில் குடியிருப்பு பெற விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் 11 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணகுடி மற்றும் வள்ளியூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று கொண்டு பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.