திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பு சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கடைகளை அகற்றுவதற்கு இன்று அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். அப்போது கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பொழுது பொக்லைன் இயந்திரம் மிக்கேல் ராஜ் என்பவரது காலில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.