நெல்லை திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த மல்லிகாவிடம் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பழவூரை சேர்ந்த கோல்டா மேரி ரூ. 3. 50 லட்சம் பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பியிடம் மல்லிகா புகாரளித்துள்ளார். விசாரணையில் கோல்டா மேரி 2 பேருடன் சேர்ந்து மேலும் 17 பேரிடம் ரூ. 44. 92 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது. இவ்வழக்கில் 2வது எதிரியான ரஞ்சித் குமாரை போலீசார் இன்று கைது செய்தனர்.