குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்லும் தண்ணீர்

59பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமம் அடைந்த வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முருகன் கோயில் ரதவீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் குடிநீர் வீணாக செல்கிறது. இவ்வாறு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக செல்லும் குடிநீரால் பலருக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி