தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து ஹன்மகொண்டாவுக்குச் செல்லும் ஒரு அரசு பேருந்தில், பெண் ஒருவர் துணியை வைத்து இடம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சில பெண்கள் அந்த இருக்கையில் அமர்ந்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளத்தொடங்கிய அப்பெண்கள் தலை முடியை பிடித்துக்கொண்டு மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.