பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர் சாந்தி (56). இவரின் பக்கத்து வீட்டு பெண் லோகநாயகி என்பவர் தனது தோழி மகேஸ்வரி என்பவருடன் இணைந்து, மகளிர் சுயஉதவி குழு மூலம் கடன் வாங்கித்தருவதாக கூறி சாந்தியை அழைத்துச்சென்றுள்ளனர். இதனிடையே ஒரு பேக்கரியில் சாப்பிடும்போது குளிர் பானத்தில் மயக்கமருந்து கலந்து சாந்திக்கு கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கமடைந்த சாந்தி அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த சாந்தி அளித்த புகாரின்பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.