நாதகவில் இருந்து பலர் விலகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் விலகிவிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் தீ போல் பரவி வருகிறது. இந்த போஸ்டரால் சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில், "ஒரு பொறுப்பை கூட ஒழுங்கா போடாமல் அப்படி என்னப்பா எடிட் பண்றீங்க!" என்று சாட்டை துரைமுருகன் பதிவிட்டு நறுக் பதிலடி கொடுத்துள்ளார்.