தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, நீலகிரி பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.