ரூ.15 லட்சத்தில் சிறந்த 3 கறவை மாடுகளுக்கு விருது

52பார்த்தது
ரூ.15 லட்சத்தில் சிறந்த 3 கறவை மாடுகளுக்கு விருது
ரூ.15 லட்சத்தில் மாவட்ட அளவில் சிறந்த மூன்று கறவை மாடுகளுக்கு விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அறிவித்துள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பால் கறக்கும் போட்டி நடத்தப்பட்டு, மூன்று கறவை மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உற்பத்தியாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பால் உற்பத்தி பெருக்க உத்திகளை பரிமாறிக் கொள்ளவும் இத்திட்டம் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி