நெல்லை மாவட்டம் விகே. புரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று (அக்.,24) இரவு அவர் அம்பாசமுத்திரம் அருகே சென்றபோது சாலையின் நடுவே நாய் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா இன்று (அக்.,25) சிகிச்சை பலனில்லாமல் மூளைச்சாவு அடைந்தார்.