நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் முக்கூடலில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவரது ஹோட்டலுக்கு சங்கர் என்பவரின் மகன் மாரியப்பன் என்பவர் அடிக்கடி வந்து பிரச்சனை செய்து வந்ததாகவும் அதனால் ஓட்டல் ஹோட்டலுக்கு வராதே என கூறியதால் ஆத்திரம் அடைந்த சங்கரின் மகன் மாரியப்பன் ஹோட்டலை சேதப்படுத்தியுள்ளார். உரிமையாளர் மாரியப்பன் அளித்த புகாரில் தகராறு செய்த மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.