நெல்லை முன்னாள் எஸ்பிக்கு சமூக ஆர்வலர் வாழ்த்து தெரிவித்தார்

653பார்த்தது
நெல்லை முன்னாள் எஸ்பிக்கு சமூக ஆர்வலர் வாழ்த்து தெரிவித்தார்
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன் சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சிலம்பரசன் நெல்லை மாவட்டத்தின் புதிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் போலீஸ் அதிகாரியால் விசாரணை கைதிகள் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தில் தான் காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில் இன்று தமிழகத்தில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

அதில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சரவணன் சென்னை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பல்வேறு பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நெல்லை மாவட்ட சமூக ஆர்வலரும் மின்னல் அறக்கட்டளை நிர்வாகியுமான மில்லத் இஸ்மாயில் அதிகாரி சரவணனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி