பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டுமென அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் சசிகலா ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில் பொறுத்தது போதும் தொடர் தோல்வியில் இருந்து அதிமுகவை உயிர்ப்பிக்க கட்சியை வழிநடத்த தலைமை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.