நிவாரண பொருட்கள் வழங்கிய பாளை வடக்கு வட்டார காங்கிரஸ்

590பார்த்தது
நிவாரண பொருட்கள் வழங்கிய பாளை வடக்கு வட்டார காங்கிரஸ்
நெல்லை மாவட்டம் பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் டியூக் துரைராஜ் ஏற்பாட்டில் T. R. சந்திப் உதவியுடன் திருப்பூர் மடான் பவுண்டேஷன் சார்பாக அரிசி, எண்ணெய், கோதுமை, ரவை, மைதா, சேமியா, மஞ்சள், பொடி, மிளகாய் பொடி, வத்தல் தூள், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, உப்பு , சர்க்கரை , போன்ற வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோணித்துறை கான்சாபுரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாராயணகுமார், சந்தைப்பேட்டை கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் பீர் மைதீன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி