தஞ்சாவூர் பேராவூரணியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், டீசல் டேங்க் அருகில் ரகசிய அறை அமைத்து, 330 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்திய பெரமராஜ் (34), அண்ணாதுரை (44), முத்தையா (60) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கருப்பையா (52) என்பவரை தேடி வருகின்றனர்.