தமிழகம் முழுவதும் இன்று (நவ.23) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், “கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.