பட்டாணியில் உள்ள வைட்டமின் A, E, D, C, K ஆகியவை உள்ளன. இவை நமது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கூடுதலாக, பட்டாணியில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நமது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. பட்டாணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தும் இதனை அதிகமாக சாப்பிட்டால் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். கீல்வாதம் உள்ளவர்கள் பச்சை பட்டாணியை சாப்பிடக்கூடாது. அதிக யூரிக் அமிலம் பிரச்சனை இருப்பவர்கள் பட்டாணி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.