திருச்செந்தூரில் தொடர் மழை; கோயிலில் மழைநீர் புகுந்தது

55பார்த்தது
திருச்செந்தூரில் தொடர் மழை; கோயிலில் மழைநீர் புகுந்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியான சபாபதிபுரம் சந்திப்பில் தேங்கிய மழைநீரை, நகராட்சிப் பணியாளர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றினர். கொட்டும் மழையிலும் நனைந்தபடியே வந்த பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி