நெல்லை மாநகர பகுதியில் நேற்று பிற்பகல் வரை வெயில் தாக்கம் காணப்பட்டது. பின்னர் மாலை திடீரென மழை பெய்தது. குறிப்பாக கொக்கிரகுளம் நெல்லை சந்திப்பு பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் சுமார் 20 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நான்கு நேரியில் 20 மில்லி மீட்டரும் ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.