தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவின் தலைவர் எம். எல். ஏ நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் அசோகன் ஈஸ்வரன் மு. பெ. கிரி ஆகியோர் நேற்று மாலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அனைத்து பொது நிறுவனங்களின் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இதில் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.