நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து மீது தவறான பாதையில் வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியது. இதில் டாடா ஏசி வாகனத்தில் இருந்த ஓட்டுநர் மகேஷ், உசிலவேல் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தனர். மூன்றடைப்பு போலீசார் அவர்களது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.