நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கருத்தபிள்ளையூர் பகுதியில் கரடி ஒன்று இரவில் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வனத்துறை சார்பில் அங்கு கூண்டு ஒன்று வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்தக் கூண்டில் சுமார் 6 வயதுடைய ஆண் கரடி சிக்கியது. இதைத் தொடர்ந்து களக்காடு முண்டந்துறை வனசரகத்திற்கு உட்பட்ட துலுக்கர்மொட்டை பகுதியில் கள இயக்குனர் மாரிமுத்து முன்னிலையில் அந்த கரடி வனப்பகுதிக்குள் விடப்பட்டது.