மத்திய அமைச்சர்கள் ஆகும் ஐந்து முன்னாள் முதல்வர்கள்..!

576பார்த்தது
மத்திய அமைச்சர்கள் ஆகும் ஐந்து முன்னாள் முதல்வர்கள்..!
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி இன்று(ஜூன் 9) இரவு பதவி ஏற்க உள்ளது. இதில் பல முன்னாள் முதல்வர்களுக்கும் அமைச்சரவையில் மோடி வாய்ப்பு வழங்க இருக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர்களாக இருக்கும் குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் பீகார் முன்னாள் முதல்வராக இருந்த ஜித்தன்ராம் மஞ்சி, ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கபட்டுள்ளது.