கற்பூர எண்ணெயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

72பார்த்தது
கற்பூர எண்ணெயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!
பூஜையில் பயன்படுத்தப்படும் கற்பூரத்தின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை போட்டு காய்ச்சி நெஞ்சு பகுதியில் தடவினால், நெஞ்சில் கட்டியுள்ள சளி கரையும். கபம் மற்றும் இருமலை குறைக்கும். கால்களில் உள்ள வெடிப்புகளுக்கு இந்த கற்பூர எண்ணெய் நல்ல மருந்தாக பயன்படுகிறது. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் எண்ணெயை தடவினால் வலி நீங்கும். மேலும் காயம் விரைவில் குணமாகும். அரிப்பு உள்ள இடத்தில் கற்பூர எண்ணெய் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். பூஞ்சை தொற்றுகளை தடுக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.