கடலோர ஆந்திரப்பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, கோவை, விருதுநகர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.